Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாரிஸ் ஒலிம்பிக் - பி.வி.சிந்து நெகிழ்ச்சி பதிவு!

04:46 PM Aug 02, 2024 IST | Web Editor
Advertisement

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தோல்வியை சந்தித்த நிலையில், பாட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து வெளியிட்ட இன்ஸ்டா பதிவு அவரது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Advertisement

பாரிஸ் ஒலிம்பிக் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் (16வது சுற்று), பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சீன வீராங்கனை பிங் ஜியோவுடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், 21 - 19, 21 - 14, என்ற செட் கணக்கில் சீன வீராங்கனையிடம் பி.வி. சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 2 முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி.வி. சிந்து, பாரீஸ் ஒலிம்பிக்கில் இம்முறை பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தோல்வி அடைந்து வெளியேறி இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

தோல்விக்குப் பிறகு பாட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து தனது இன்ஸ்டா பக்கத்தில் உருக்கமான பதிவை எழுதியுள்ளார்.

அதில் பி.வி.சிந்து கூறியதாவது:

பாரீஸ் ஒலிம்பிக்: அழகான பயணம் ஆனால் கடினமான தோல்வி இந்தத் தோல்வி எனது பாட்மின்டன் வாழ்க்கையில் மிகப் பெரியது. இதை ஏற்றுக்கொள்வதற்கு எனக்கு சிறிது காலம் தேவைப்படும். ஆனால் வாழ்க்கையில் இதையெல்லாம் கடந்து முன்னேறி செல்ல வேண்டும். 2 ஆண்டுகள் காயம், நீண்ட நாள்கள் போட்டி விளையாடாமல் தள்ளியே இருந்ததால் பாரீஸ் ஒலிம்பிக் எனக்கு ஒரு போர்க்களம் போலிருந்தது. சவால்கள் நிறைந்திருந்தாலும் எனது அழகான நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி 3ஆவது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்றது எனக்கு மிகுந்த பெருமையாகவும் இருந்தது.

இந்த அளவில் நான் போட்டியிட்டதும் அடுத்த தலைமுறைக்கு உத்வேகம் அளித்ததையும் நினைத்து நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். நானும் எனது அணியும் ஒட்டுமொத்த உழைப்பையும் பாரீஸ் ஒலிம்பிக்கில் கொடுத்தோம். அதில் எந்தவித வருத்தமும் இல்லை. தற்போது, எனது வருங்காலம் குறித்து தெளிவுபடுத்துகிறேன்: நான் தொடர்ந்து விளையாடுவேன், ஆனால் ஒரு சிறிய ஓய்வுக்கு பிறகு. எனது உடலுக்கும் குறிப்பாக எனது மனதுக்கும் ஓய்வு தேவைப்படுகிறது. இருப்பினும் நான் போட்டிகள் குறித்து சரியாக திட்டமிட வேண்டும். நான் அதிகம் விரும்பும் பாட்மின்டனை ரசித்து விளையாட விரும்புகிறேன்.

Tags :
badmintonIndian Playernews7 tamilNews7 Tamil UpdatesParis OlympicsPVSindhu
Advertisement
Next Article