பாரிஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் - அரையிறுதிக்கு முன்னேறி வரலாற்று சாதனை படைத்த லக்சயா சென்!
06:42 AM Aug 03, 2024 IST
|
Web Editor
சீன தைபேயின் தியென் சென் சோவை 19-21, 21-15, 21-12 என்ற செட் கணக்கில் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்தார். ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் அரையிறுதிக்குள் நுழைந்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையையும், அரையிறுதிக்கு சென்ற முதல் இந்திய ஆண் வீரர் என்ற சாதனையும் படைத்தார். கிடாம்பி ஸ்ரீகாந்த் (2016), பருபள்ளி காஷ்யப் (2012) ஆகியோர் ஒலிம்பிக்கில் காலிறுதிக்குள் நுழைந்தனர். 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில், பேட்மிண்டன் பதக்கத்திற்கான இந்தியாவின் எஞ்சியிருக்கும் ஒரே நம்பிக்கை லக்சயா சென் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
பாரிஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில், இந்திய வீரர் லக்சயா சென் அரை இறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
Advertisement
பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் 100 ஆண்டுகளுக்கு பிறகு 2024ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகள், கடந்த ஜூலை 26ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டிகளில் இந்திய சார்பில் பல வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர். தற்போதுவரை இந்தியா 3 பதக்கங்களை வென்றுள்ளது. இந்நிலையில் இந்திய பேட்மிண்டன் வீரர் லக்சயா சென் ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் ரவுண்ட் காலிறுதி போட்டியில் வெற்றிப் பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
Next Article