பாரீஸ் ஒலிம்பிக்: முதல் தங்கத்தை வென்ற ஆஸ்திரேலியா!
பாரீஸ் ஒலிம்பிக்கில் ஆஸ்திரேலியா முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.
சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மிக முக்கியமானது, ஒலிம்பிக்ஸ் போட்டியாகும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டிகள், இந்த முறை பாரீஸ் நகரில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இப்போட்டிகள் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை 17 நாட்கள் நடைபெறவுள்ளது. பாரீஸில் நடைபெறும் 33வது ஒலிம்பிக்ஸ் போட்டியில் 200 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் சீனா முதல் தங்கப் பதக்கத்தை வென்று அசத்தியது. இந்த நிலையில், ஆஸ்திரேலியா முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. ஆஸ்திரேலிய வீராங்கனை கிரேஸ் பிரௌன் சைக்கிளிங்கில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இந்தப் போட்டியில் பிரிட்டனின் அன்னா ஹெண்டர்சன் வெள்ளிப் பதக்கமும், அமெரிக்காவின் சோல் டைஜர்ட் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.