Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாரீஸ் ஒலிம்பிக்ஸ்: தொடக்க விழா சுவாரஸ்யமான நிகழ்வுகள்!

10:33 AM Jul 27, 2024 IST | Web Editor
Advertisement

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டி 2024  தொடக்க விழாவில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

Advertisement

சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மிக முக்கியமானது, ஒலிம்பிக்ஸ் போட்டியாகும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டிகள், இந்த முறை பாரீஸ் நகரில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இப்போட்டிகள்  ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை 17 நாட்கள் நடைபெறவுள்ளது.

  • பாரீஸில் நடைபெறும் 33வது ஒலிம்பிக்ஸ் போட்டியில்  200 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர்,  வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
  • இந்தியாவின் சார்பில் 117 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
  • பாரீஸில் இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு 11மணி அளவில் விழா தொடங்கியது.
  • ஒலிம்பிக்ஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக, மைதான வளாகத்துக்குள் நிகழ்ச்சிகள் நடைபெறாமல் மைதானத்திற்கு வெளியே நதியில் தொடக்க நிகழ்ச்சிகள் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது.
  • பிரான்ஸ் நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஒலிம்பிக் போட்டியை தொடக்கி வைத்தார்.
    நதியில் மிதந்தபடி அணிவகுப்பு
  • பாரீஸில் உள்ள பிரபலமாக அறியப்படும் சென் நதியில் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் அணிகள் படகு மற்றும் கப்பல்களில் அணிவகுத்தன. நதியின் இரு பக்கமும் நின்று அதைப் பார்வையிட 3,20,000 பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.
  • 250 நாடுகளைச் சேர்ந்த சுமார் 6,800 வீரர்கள் 85 படகுகள் மற்றும் கப்பல்களில் அணிவகுத்தனர்.
  • அப்போது, தலைநகரின் முக்கிய அடையாளமாகத் திகழும் ஆஸ்டர்லிட்ஸ் பாலம், சிவப்பு, வெள்ளை மற்றும் நீலநிற வான வேடிக்கைகளால் ஒளிர்ந்தது.

பார்வையாளர்களை நனைத்த லேசான மழை

  • ஒலிம்பிக்ஸ் போட்டி நடைபெறும் நாளான நேற்று காலை முதலே பாரீஸில் மழை பெய்யத் தொடங்கியது. மேலும் பிற்பகல் நேரத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் துவக்க நிகழ்ச்சி தொடங்கும் நேரத்தில் லேசான தூரல் மட்டுமே பெய்து ஒரு நல்ல சூழலை ஏற்படுத்திக் கொடுத்தது. லேசான தூரல் மழையில் பார்வையாளர்களில் சிலர் குடைகளுடனும் , சிலர் மழை கோட்டுடனும் உற்சாகமாக கண்டு களித்தனர்.
  • மழையால் துவக்க நிகழ்ச்சி தடைபடும் என நினைத்த நிலையில் லேசான மழை பெய்ததன் மூலம் ஒலிம்பிக்கிற்கு மழை உதவியுள்ளதாக பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

செலீனே தியோனின் ஸ்டன்னிங் பெர்ஃபாமன்ஸ் - மீண்டு வந்த  இசை அரசி

  • ஈஃபிள் டவரில் வண்ண விளக்குகளால் ஆன லைட்டிங் ஷோ நடைபெற்று முடிந்த பிறகு உலகப் புகழ்பெற்ற கனடா பாடகியான செலீனே தியோனின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
  • பாடகி செலீனே தியோன் கடுமையான நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டவர். இந்த நோய் மில்லியனில் ஒருவருக்கு ஏற்படும் நோயாகும். இந்த பாதிப்பிற்காக அவர் தொடர் சிகிச்சை பெற்று வந்ததால் கடந்த 4ஆண்டுகளாக எந்த இசை நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் 4வருடங்களுக்கு பிறகு மீண்டு வந்து ஒலிம்பிக் போட்டியின் துவக்க நிகழ்ச்சியில்  நடைபெற்ற இசை நிகழ்ச்சிக்காக அவர் பாடியுள்ளார்.
  • இதேபோல பிரபல அமெரிக்க பாடகர் லேடி காகாவின் இசை நிகழ்ச்சியும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

    ராட்சத பலூனும் ஒலிம்பிக் ஜோதியும்
  • ஒலிம்பிக்ஸ் போட்டி துவக்கி நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான ஒலிம்பிக் ஜோதியை ஏற்றும் சடங்கு நடைபெற்றது.
  • பிரெஞ்சு கால்பந்து ஜாம்பவான் ஜினாதினே ஜிடேன் முதலில் ஜோதியை ஏந்திய நிலையில் ஜோதியானது ரபேல் நடால், செரினா வில்லியம்ஸ், நாடியா கோமானேசி என பலர் கைகளுக்கு மாறி இறுதியாகப் பிரான்ஸ் தடகள வீராங்கனை மேரி ஜோஸ் பியர்ஸ் மற்றும் ஜூடோ வீரர் டெடி ரைனர் ஆகியோர் கைகளுக்கு வந்தது. அவர்கள் இருவரும் கூட்டாக இணைந்து பாரிஸ் ஈபில் கோபுரம் அருகே ராட்சத பலூனில் அமைக்கப்பட்ட கால்ட்ரனில் [cauldron] ஜோதியை ஏற்றினர்.

இந்திய வீரர்களின் அணிவகுப்பு

  • இந்திய நட்சத்திர பேட்மின்டன் வீராங்கனையான பி.வி. சிந்து, இந்திய வீரர்கள் குழுவுக்குத் தலைமை தாங்கினார்.
  • படகில் இந்திய கொடியை பி.வி. சிந்து அசைக்கும் காட்சியை இந்திய ரசிகர்கள் ஆரவாரத்துடன் கண்டு களித்தனர்.
  • அப்போது, அனைத்து இந்திய வீரர்களும் தேசியக் கொடியைத் தங்கள் கைகளில் வைத்திருந்தனர்.
     
    அமைதி திரும்ப அழைப்பு..
  • உக்ரேன் மற்றும் காஸாவுக்கு இடையிலான போர் நடைபெற்று வரும் நிலையில் ஒலிம்பிக்ஸ் நிகழ்ச்சியில் ‘ஒற்றுமை மற்றும் சகிப்புத்தன்மை’ வலியுறுத்தும் விதமாக அமைதி கீதம் வாயிலாக வலியுறுத்தப்பட்டது.
  • உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பைத் தொடர்ந்து, ரஷ்யா மற்றும் பெலாரூஸ் அணிகள் ஒலிம்பிக்கில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது.
  • அகதிகள் ஒலிம்பிக் குழு மற்றும் பாலத்தீன ஒலிம்பிக் குழுவைச் சேர்ந்த வீரர்கள், பார்வையாளர்களிடம் இருந்து பெரும் ஆதரவைப் பெற்றனர்.
Tags :
#Olympicsஒலிம்பிக் 2024ஒலிம்பிக்ஸ் போட்டிபாரிஸ் ஒலிம்பிக்Olympics 2024paris 2024 olympicsParis Olympics 2024Paris Olympics2024
Advertisement
Next Article