பாரிஸ் ஒலிம்பிக் | 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிச்சுற்று: பதக்கத்தை தவறவிட்ட அர்ஜுன் பாபுதா!
பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிச்சுற்று போட்டியில் இந்திய வீரர் அர்ஜுன் பாபுதா 4வது இடத்தைப் பிடித்து போட்டியில் இருந்து வெளியேறினார்.
சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மிக முக்கியமானது, ஒலிம்பிக் போட்டியாகும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டிகள், இந்த முறை பாரிஸ் நகரில் கடந்த 26ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இப்போட்டிகள் ஆகஸ்ட் 11ம் தேதி வரை 17 நாட்கள் நடைபெறவுள்ளது. பாரிஸில் நடைபெறும் 33வது ஒலிம்பிக்ஸ் போட்டியில் 200 நாடுகளைச் சேர்ந்த 10,500 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இந்த சூழலில் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிச்சுற்றுக்கான தகுதிச்சுற்று போட்டியில் இந்திய வீரர் அர்ஜுன் பாபுதா பங்கேற்றார். இதில் பாபுதா சிறப்பாக செயல்பட்டு 630.1 புள்ளிகள் பெற்று 7வது இடம் பிடித்தார். இதன்மூலம் அவர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்த நிலையில், ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிச்சுற்று போட்டி இன்று நடைபெற்றது.