Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாரிஸ் ஒலிம்பிக் வில்வித்தை: அரைஇறுதியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி!

08:15 PM Aug 02, 2024 IST | Web Editor
Advertisement

பாரிஸ் ஒலிம்பிக் வில்வித்தை அரைஇறுதியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

Advertisement

சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மிக முக்கியமானது, ஒலிம்பிக் போட்டியாகும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டிகள், இந்த முறை பாரிஸ் நகரில் கடந்த 26ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இப்போட்டிகள் ஆகஸ்ட் 11ம் தேதி வரை 17 நாட்கள் நடைபெறவுள்ளது. பாரிஸில் நடைபெறும் 33வது ஒலிம்பிக்ஸ் போட்டியில் 200 நாடுகளைச் சேர்ந்த 10,500 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர் மற்றும் ஸ்வப்னில் குசாலே வெண்கலம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது. இதற்கிடையே, இன்று (ஆக. 2) மதியம் நடந்த வில்வித்தை போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அங்கிதா-தீரஜ் ஜோடி 5-1 என்ற கணக்கில் இந்தோனேசிய ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதிபெற்றது.

தொடர்ந்து நடந்த வில்வித்தை காலிறுதி போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அங்கிதா-தீரஜ் ஜோடி 5-3 என்ற கணக்கில் ஸ்பெயின் ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றது. இந்த அரைஇறுதியில் அங்கிதா பகத் - தீரஜ் பொம்மதேவரா இணை தென் கொரியாவின் லிம் சி-ஹியோன் - கிம் வூ-ஜின் இணைய எதிர்கொண்டது.

விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் இறுதியில் இந்திய அணி 6-க்கு 2 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியை தழுவி இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை நழுவ விட்டது.

Tags :
archeryDhiraj Bommadevaraindian teamNews7Tamilnews7TamilUpdatesParis 2024paris 2024 olympicsParis Olympicspravin jadhavtarundeep rai
Advertisement
Next Article