Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அதிக எண்ணிக்கையில் மாணவர்களை ஏற்றி செல்லும் தனியார் பள்ளி வாகனங்கள் - பெற்றோர் வேதனை!

11:42 AM Dec 15, 2023 IST | Web Editor
Advertisement

செங்கம் தனியார் பள்ளி வாகனங்களில் கால்நடைகளை ஏற்றுவது போல்,  மாணவர்களை அதிக எண்ணிக்கையில் ஏற்றி செல்வதால் பெற்றோர்கள் கவலை அடைந்து வருகின்றனர். 

Advertisement

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து அதிகளவு
மாணவ,  மாணவிகள் செங்கம் நகர் பகுதியில் இயங்கும் சுமார் 10-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:  மக்களவைக்குள் குதித்து தாக்குதல் | மேலும் இருவரைப் பிடித்து விசாரணை!

இந்த நிலையில் செங்கம் தனியார் பள்ளி வாகனங்களில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை கால்நடைகளை போல் ஏற்றி செல்வதால் பெற்றோர்கள் கவலை அடைந்து வருகின்றனர்.  பள்ளி வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா என்று சரி பார்க்க வேண்டும்.

மேலும் வாகனங்கள் சரிவர இயங்குகிறதா என்றும் மாவட்ட போக்குவரத்து அதிகாரிகள் சரி பார்க்க வேண்டும்.  பள்ளி மாணவர்களை வாகனங்களில் அதிக அளவில் ஏற்றக் கூடாது என கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்பது இப்பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags :
Chengamnews7 tamilNews7 Tamil UpdatesPrivate SchoolsSchool busschool StudentsSchoolsstudentstiruvannamalai
Advertisement
Next Article