புதிய போஸ்டரை வெளியிட்ட ‘பராசக்தி’ படக்குழு!
 
                        சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் “பராசக்தி” படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது .
                
 
        
                06:38 PM Jan 30, 2025 IST 
                    | 
                            Web Editor
                
                 
    
                
                
     
            
    
             
            
    
    
         
        
    
    
    
        
        
         
    
      
    
                 Advertisement 
                
 
            
        நடிகர் சிவகார்த்திகேயனின் 25வது படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கி வருகிறார். இப்படத்திற்கு ‘பராசக்தி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தி திணிப்பை மையமாக கொண்டு படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக ஜெயம் ரவி நடிக்கிறார்.
                 Advertisement 
                
 
            
        இப்படத்தில் நடிகை ஸ்ரீலீலா மற்றும் அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்க்கு ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் டைட்டில் வீடியோவை படக்குழு நேற்று வெளியிட்டது. இந்நிலையில் படக்குழு இன்று புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
 Next Article