"பராசக்தி" திரைப்படத்தின் 2-வது பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு...!
இறுதி சுற்று, சூரரை போற்று ஆகிய படங்களை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கும் திரைப்படம் பராசக்தி. இப்படத்தில் சிவாகார்த்திகேயன்,ரவிமோகன், அதர்வா ஆகியோர் முக்க கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் நடிகை ஸ்ரீ லீலா இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது. அதே நேரத்தில் நடிகரும் தவெக தலைவருமான விஜயின் கடைசி படமான ஜன நாயகன் படக்குழுவும் பொங்கல் வெளியீடு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் முதல் பாடலாக சமீபத்தில் வெளியான ’நெஞ்சாங்குழி’ பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் ரவிமோகன், அதர்வா ஆகியோரும் தங்கள் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் பராசக்தி படத்தின் 2வது பாடல் ப்ரோமோ இன்று மாலை 5.30 மணிக்கும வெளியாகும் என படக்குழு நேற்று அறிவித்திருந்தது. அதன்படி, தற்போது பாடலின் ப்ரோமோவை ஜி.வி. பிரகாஷ் வெளியிட்டுள்ளார். மேலும் அதில் "பராசக்தி" திரைப்படத்தின் 2-வது பாடலான "ரத்னமாலா" வருகிற 25ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.