Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#ParandurAirport – சுற்றுச்சூழல் ஆய்வு செய்ய மத்திய அரசு அனுமதி!

08:06 PM Sep 09, 2024 IST | Web Editor
Advertisement

பரந்தூர் புதிதாக விமான நிலையம் அமையவுள்ள பகுதியில் சுற்றுச்சூழல் ஆய்வு செய்வதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

Advertisement

சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் அமைய உள்ளது. இதற்காக சுமார் 5,300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில் ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் முழுவதும் கையகப்படுத்தப்பட உள்ளன. இதனைத் தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தப் கிராம மக்கள் கடந்த 2 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அப்பகுதி மக்கள் கடந்த சுதந்திர தினத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திலும் பங்கேற்று பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினர். போராட்டத்தில் ஈடுபட்ட பலரின் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. பரந்தூர் விமான நிலையத்துக்காக ஏகனாபுரத்தை சுற்றியுள்ள கிராமங்களில் நிலம் எடுப்பதற்கான அறிவிப்பை தமிழக அரசு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை வெளியிட்டு வருகிறது.

இதனிடையே பரந்தூர் விமான நிலையத்துக்காக நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பை மொத்தமாக வெளியிடாமல் பகுதி பகுதியாக அரசு சார்பில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், ஏகனாபுரம் கிராமத்தில் 8 பிரிவுகளாக பிரித்து 234 ஏக்கர் நிலம் கையக படுத்தப்படுவதாக அரசு அறிவித்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, பரந்தூர் விமான நிலைய பெருந்திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை தமிழ்நாடு அரசு தொடங்கியது. இது தொடர்பாக ஆலோகர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஒப்பந்தப்புள்ளியையும் அரசு அறிவித்தது. இந்த நிலையில், பரந்தூரில் புதிதாக விமான நிலையம் அமையவுள்ள பகுதியில் சுற்றுச்சூழல் ஆய்வு செய்வதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. தமிழ்நாடு தொழில்வளர்ச்சிக் கழகத்தின் விண்ணப்பத்தை பரிசீலனை செய்து இதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆய்வு செய்வதற்கான எல்லைகளை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கியுள்ளது.

Tags :
Central GovtENVIRONMENTinspectionnews7 tamilParandurParandur AirportTN Govt
Advertisement
Next Article