Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய பரமக்குடி ஆட்டுச் சந்தை!

09:06 AM Jun 13, 2024 IST | Web Editor
Advertisement

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற பரமக்குடி ஆட்டுச் சந்தையில் விற்பனை களைகட்டியது. 

Advertisement

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆட்டுச்சந்தையில் வியாழக்கிழமை தோறும் நடைபெறும். இந்த ஆட்டு சந்தையில் சிவகங்கை, மதுரை,  தேனி,  விருதுநகர்,  தஞ்சாவூர், புதுக்கோட்டை என பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இங்கு ஆடு வாங்க வருவது வழக்கம்.  இங்கு சாதாரண நாள்களில் 30 முதல் 50 லட்சம் ரூபாய் வரையிலும்,  விழாக்காலங்களில் 1 கோடி ரூபாய் வரையிலும் ஆடுகள் விற்பனை செய்யப்படும்.

இந்த நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இங்கு ஆட்டுச்சந்தை களைகட்டியது.
கடந்த சில வாரங்களை விட இன்று நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் சுமார் பத்தாயிரம்
ஆடுகள் வரை சந்தைக்கு கொண்டு வரப்பட்டன.  10 கிலோ எடை கொண்ட கிடா ஆடு ஒன்று ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை விற்பனை செய்யப்பட்டது.


இன்று அதிகாலையில் இருந்து நடைபெற்று வரும் இந்த ஆட்டு சந்தையில் வியாபாரிகள்
மற்றும் பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்கி சென்றனர்.  மேலும் சந்தையில் ஆடுகள் வரத்து சற்று குறைவாக காணப்பட்டதால்,  விலை பன்மடங்கு உயர்வாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags :
Bakrid FesstivalEIDgoat marketParamakudi Market
Advertisement
Next Article