Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Paralympics2024 | பாரிசில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது பாராலிம்பிக் போட்டி!

06:59 AM Aug 28, 2024 IST | Web Editor
Advertisement

பாராலிம்பிக் போட்டி பாரிசில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. 

Advertisement

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக்போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருவதை நாம் அறிவோம். அதன்படி 33 வது ஒலிம்பிக் போட்டி கடந்த ஜூலை 26ம் தேதி முதல் பிரமாண்டமாக தொடங்கி கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி நிறைவடைந்தது. இந்த நிலையில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிரம்மாண்ட விழாவுடன் இன்று (ஆக.28) தொடங்க உள்ளது.

இந்த போட்டியில் 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்தப் பாராலிம்பிக் போட்டிகள் இன்று  தொடங்கி செப்டம்பர் 8 ஆம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறவுள்ளன. வரலாற்றுச் சிறப்புமிக்க இடமான பிளேஸ் டி லா கான்கார்ட்டில் பாராலிம்பிக் தொடக்க விழா நடைபெறுகிறது. பாராலிம்பிக்கில் இந்தியா சார்பில் 32 பெண்கள் உட்பட 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

பாராலிம்பிக் விளையாட்டுகளின் பிறப்பிடமாகக் கருதப்படும் லண்டனின் வடமேற்கே உள்ள கிராமமான ஸ்டோக் மாண்டேவில்லில் கடந்த 24ம் தேதி ஜோதி  ஏற்றப்பட்டது. போட்டி தொடங்கும் முதல் நாளான இன்று பாரா டேக்வாண்டோ, பாரா டேபிள் டென்னிஸ், பாரா நீச்சல் மற்றும் பாரா சைக்கிள் ஓட்டுதல் ஆகிய போட்டிகள் நடைபெறுகிறது.

Tags :
GamesParalympicparalympics 2024Paris 2024
Advertisement
Next Article