Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Paralympics2024 | தனது 8வது தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார் அமெரிக்க வீராங்கனையான ஒக்ஸானா!

08:58 PM Sep 04, 2024 IST | Web Editor
Advertisement

பாரா சைக்கிளிங்கில் அமெரிக்க வீராங்கனையான ஒக்ஸானா மாஸ்டர்ஸ் 8 ஆவது தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.

Advertisement

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 17வது பாராலிம்பிக்ஸ் விளையாட்டு தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த பல விளையாட்டுகளில் புகழ்பெற்றவரான ஒக்ஸானா மாஸ்டர்ஸ் புதன்கிழமை 23 நிமிடங்கள் 45.20 வினாடிகளில் இலக்கை கடந்து நெதர்லாந்தின் சாண்டல் ஹெனெனைவிட 6.24 வினாடிகள் முன்னதாகவும், சீனாவின் சன் பியான்பியனைவிட 1 நிமிடம் 27.87 வினாடிகள் முன்னதாகவும் முடித்து சாதனைப் படைத்தார்.

ஒக்ஸானா மாஸ்டர்ஸ் இதுவரை கோடை மற்றும் குளிர்கால பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் 8 தங்கப்பதக்கங்கள் உள்பட 18 பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளார்.ஒக்ஸானா மாஸ்டர்ஸ் 1989 ஆம் ஆண்டில் உக்ரைனில் உள்ள செர்னோபில் அருகே பிறந்தார். செர்னோபில் உலகின் மிக மோசமான அணுசக்தி விபத்து ஏற்பட்ட இடமாகும். அணுசக்தி விபத்துக்குப் பிறகு இங்கு பிறக்கும் குழந்தைகள் குறைபாடுடன் இருப்பதாக நம்பப்படுகிறது. ஒக்ஸானா மாஸ்டர்ஸ் குழந்தையாக இருந்தபோது அமெரிக்க பெண் ஒருவரால் தத்தெடுக்கப்பட்டார்.

ஒக்ஸானா மாஸ்டர்ஸ் 9 வயதாக இருந்தபோது கதிர்வீச்சு பாதிப்பால் அவரது இடது முழங்காலுக்கு அருகில் துண்டிக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 14 வயதில் வலது காலும் துண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags :
paralympicsparalympics 2024Paris Paralympics 2024
Advertisement
Next Article