#Paralympics2024 | இந்தியாவுக்கு 25 ஆவது பதக்கம்... ஜூடோவில் வெண்கலம் வென்றார் கபில் பர்மார்!
பாரிஸ் பாராலிம்பிக்கில் ஜூடோ ஆடவர் 60 கிலோ J1 பிரிவில் இந்திய வீரர் கபில் பர்மர் வெண்கலப் பதக்கம் வென்றார்.
17-ஆவது பாராலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், ஜூடோ ஆடவர் 60 கிலோ J1 பிரிவில் இந்திய வீரர் கபில் பர்மர் வெண்கல பதக்கம் வென்றார்.
அவர் உலகத் தரவரிசையில் 2வது இடத்தில் இருக்கும் பிரேசில் வீரர் எலியேல்டன் டி ஒலிவேராவை 10-0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி அசத்தியுள்ளார். பாராலிம்பிக் வரலாற்றில் ஜூடோவில் இந்தியா பெறும் முதல் பதக்கம் இதுவாகும். பாராலிம்பிக் போட்டியில் இந்தியா 5 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 25 பதக்கங்களைப் பெற்று 14வது இடத்தில் உள்ளது.