Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Paralympics துப்பாக்கி சுடுதலில் போராடி தோற்றார் தங்க மங்கை அவனி லெகரா!

09:59 PM Sep 03, 2024 IST | Web Editor
Advertisement

பாராலிம்பிக்ஸ் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை அவனி லெகரா போராடி தோற்றார்.

Advertisement

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பாராலிம்பிக்ஸ் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. மகளிருக்கான 50 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனைகள் அவனி லெகரா 1159 புள்ளிகள் பெற்று 7-வது இடம் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

22 வயதான அவனி லெகரா, 11 வயது சிறுமியாக இருந்தபோது கார் விபத்தில் சிக்கி இடுப்பிற்கு கீழே உள்ள உறுப்புகள் செயல்படாமல் போனது. ஆனாலும், துவண்டுவிடாமல் துப்பாக்கி சுடுதலில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் அவனி லெகரா. இவர் கடந்த வெள்ளிக்கிழமை பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இருந்தார்.

இந்நிலையில், பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் எஸ்.எச்.1 பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் அவனி லேகரா 420.6 புள்ளிகள் பெற்று 5வது இடம் பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார். பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி இதுவரை 3 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Avani LekharaFinalnews7 tamilParalympic Games Paris 2024paralympics 2024Paris 2024Paris Paralympics 2024Sports
Advertisement
Next Article