Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Paralympics | கிளப் எறிதலில் தங்கம், வெள்ளியை தட்டித் தூக்கிய இந்தியா! பதக்கப் பட்டியலில் 13-வது இடத்திற்கு முன்னேற்றம்!

09:57 AM Sep 05, 2024 IST | Web Editor
Advertisement

பாராலிம்பிக் போட்டியில் ஆடவர்களுக்கான F51 கிளப் எறிதல் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர்களான தரம்பிர் தங்கமும், பிரனவ் சூர்மா வெள்ளியும் வென்று அசத்தியுள்ளனர்.

Advertisement

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்கில், ஆடவர்களுக்கான F51 கிளப் த்ரோ பிரிவில், இந்திய வீரர் தரம்பீர் தங்கம் வென்று அசத்தியுள்ளார். பந்தினை 34.92 மீட்டர் தூரத்திற்கு தூக்கி எறிந்து, ஆசிய சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்தார். அதேபோட்டியில் சக இந்திய வீரரான பிரனவ் சர்மா, 34.59 மீட்டர் தூரத்திற்கு பந்தினை வீசி, வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.

மேலும் ஆடவர்களுக்கான வில்வித்தை போட்டியில், இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் தங்கம் வென்று அசத்தியுள்ளார். ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் என இரண்டு போட்டிகளிலும் சேர்த்து, இந்தியர் ஒருவர் வில்வித்தை பிரிவில் தங்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும். இந்த மூன்று வீர ர்களுக்கும் இந்திய தலைவர்கள் அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தற்போது வரை இந்தியா 5 தங்கம், 9 வெள்ளி மற்றும் 10 வெண்கலம் என மொத்தம், 24 பதக்கங்களுடன் 13-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 62 தங்கம் உட்பட 135 பதக்கங்களுடன் சீனா முதலிடத்திலும், 33 தங்கம் உட்பட 74 பதக்கங்களுடன் இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும், 25 தங்கம் உட்பட 63 பதக்கங்களுடன் அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் உள்ளது.

Tags :
Dharambirgold medalparalympicsPranav Soormasilver medal
Advertisement
Next Article