#Paralympics 100 மீட்டர் ஓட்டம் | இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றார் இந்திய வீராங்கனை சிம்ரன்!
பாராலிம்பிக் 100 மீட்டர் டி-12 ஓட்டப் போட்டியில் இந்திய வீராங்கனை சிம்ரன் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்.
17வது பாராலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் இந்தியா இதுவரை 5 தங்கம், 9 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களைப் பெற்று 13வது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 100 மீட்டர் டி-12 ஓட்டப்பந்தயம் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை சிம்ரன் 12.17 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து 2-ஆவது இடம்பிடித்தார். இதன்மூலம் அவர் இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். சிம்ரன், முல்லர்-ரோட்கார்ட், ஒக்ஸானா போடூர்ச்சுக் மற்றும் கியூபாவின் ஒமாரா டுராண்ட் ஆகியோர் இறுதிப் போட்டியில் தங்கப்பதக்கத்துக்காக போட்டியிட உள்ளனர்.