Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாவோ நுர்மி விளையாட்டு போட்டி - தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா!

10:01 AM Jun 19, 2024 IST | Web Editor
Advertisement

பின்லாந்தில் நடைபெறும் பாவோ நுர்மி விளையாட்டுப் போட்டியில், ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தியுள்ளார்

Advertisement

பின்லாந்தில் துர்குவில்  'பாவோ நுார்மி' விளையாட்டு போட்டி நடைபெற்றது.  இதில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா பங்கேற்றார்.  இவர் முதல் இரு வாய்ப்பில் 83.62 மீ., மற்றும் 83.45 மீ.,  துாரம் ஈட்டியை எறிந்தார்.  மூன்றாவது வாய்ப்பில் இவர் ஈட்டியை 85.97 மீ., துாரம் எறிந்தார்.  இதன் மூலம் முதலிடம் பிடித்த நீரஜ் சோப்ரா, தங்கப்பதக்கம் வென்றார்.

பின்லாந்து வீரர் டோனி கெரானென்,  நான்காவது வாய்ப்பில் அதிகபட்சம் 84.19 மீ., துாரம் எறிந்து இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார்.  பின்லாந்தின் மற்றொரு வீரர் ஆலிவர் ஹெலாண்டர் 83.96 மீ., துாரம் எறிந்து வெண்கலம் வென்றார். கிரனடா வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸ், 82.58 மீ.  துாரம் எறிந்து நான்காவது இடம் பிடித்தார்.

முன்னதாக கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் இவர் வெள்ளிப் பதக்கம் மட்டுமே வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் தற்போது தங்கம் வென்று இருப்பதன் மூலம்,  நீரஜ் சோப்ரா 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தான் தயார் நிலையில் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

Tags :
Finlandgold medalNeeraj ChopraPaavo Nurmi Games2024
Advertisement
Next Article