திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில் பங்குனி உத்திர திருவிழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு!
08:42 AM Mar 27, 2024 IST
|
Web Editor
இதனைத்தொடர்ந்து, கோயில் வளாகத்தில் இன்னிசை பரதநாட்டிய கச்சேரி நடைபெற்றது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகத்தினர் செய்தனர். இந்த திருவிழா இன்றுடன் (மார்ச் 27) நிறைவடைகிறது.
Advertisement
திருவாலங்காடு வடாரண்யேஸ்வர சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
Advertisement
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் உடன் இணைந்த திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் சுவாமி கோயில், ஆடல் வள்ளல் நடராஜப் பெருமானின் ஐம்பெரும் சபைகளில் முதல் சபையாக திகழ்கிறது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா கடந்த 14-ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான காரைக்கால் அம்மையார் புஷ்பத்தால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப நாக ஊஞ்சல் நிகழ்வு நேற்று (மார்ச் 26) இரவு கோலகலமாக நடைபெற்றது.
Next Article