Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

11:53 AM Mar 16, 2024 IST | Web Editor
Advertisement

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. 

Advertisement

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள்
நடைபெறும்.  அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா இன்று தொடங்கியது.  இதற்காக கடந்த 13 ஆம் தேதி மாலை 5 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து, இன்று அதிகாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் காலை 9.45 மணியளவில் கோயில் தந்திரி, மேல் சாந்தி ஆகியோர் கொடி
மரத்திற்கு பூஜைகள் நடத்தினர்.  தொடர்ந்து பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.  இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  இத்திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.  ஒவ்வொரு நாளும் கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறும்.

நாளை முதல் உற்சவ பலி சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.  9 ஆம் நாள் திருவிழாவான வரும 24ஆம் தேதி சரங்குத்தியில் பள்ளிவேட்டை நடைபெறுகிறது.  மறுநாள் பம்பையில் ஆராட்டு விழா நடைபெறும்.  ஆராட்டு விழா முடிந்த பின்னர் அன்று மாலை கொடி இறக்குதல் நிகழ்ச்சி நடைபெறும்.

பங்குனி உத்திர திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தே கோயிலுக்கு வர வேண்டும் எனவும்,  பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags :
#panguni uthiramayyappan templedevoteesKeralaSabarimalaSwami Ayyappa Temple
Advertisement
Next Article