பான் - ஆதார் இணைப்பு : மே 31ம் தேதி வரை அவகாசம்! - வருமான வரித்துறை எச்சரிக்கை!
பான் எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைக்க வரும் மே 31ம் தேதி வரை வருமான வரித் துறை அவகாசம் விதித்துள்ளது.
பான் அட்டையை பயோமெட்ரிக் கொண்ட ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டது. தொடர்ந்து பான் - ஆதார் இணைப்பை வலியுறுத்தி தொடர் அறிவுறுத்தல்களும் வந்தன. பான் அட்டையை ஆதாருடன் இணைக்க மத்திய அரசு பலமுறை கால அவகாசம் வழங்கி வருகிறது.
இதையும் படியுங்கள் : வரதராஜ பெருமாள் கோயிலில் 70 ஆண்டுகளுக்கு பிறகு தீர்த்தவாரி! - திரளான பக்தர்கள் பங்கேற்பு!
இந்நிலையில், பான் ஆதாரை இணைப்பது குறித்து வருமான வரித்துறை மீண்டும் ஒரு எச்சரிக்கை ஒன்றை இன்று (மே 28) வெளியிட்டுள்ளது. அதிக விகிதத்தில் வரி விலக்குகளைத் தவிர்க்க வரும் மே 31ம் தேதிக்குள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. பான் கார்டு ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்றால், அதிகப்படியான வரித்தொகை பிடித்தம் செய்யப்படும் (டிடிஎஸ் பொருந்தக்கூடிய விகிதத்தில் 2 மடங்கு) எனவும் எச்சரித்துள்ளது.