Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பழனி கோயிலை சுற்றியுள்ள வீதிகளை வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படுத்த கூடாது- உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

06:57 PM Jan 09, 2024 IST | Web Editor
Advertisement

பழனி கோயிலை சுற்றியுள்ள வீதிகளை இனிமேல் வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படுத்த கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

Advertisement

திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி முருகன் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலுக்கு ஆண்டு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றன.

இந்நிலையில், கிரிவலப்பாதையில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இந்த ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் அகற்றாததால் அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : 4 மணி நேரத்தில் 39 செ.மீ. என கொட்டி தீர்த்த கனமழை... தண்ணீரில் மிதந்த திண்டுக்கல்…

ஏற்கனவே இந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் குழு அமைத்து உத்தரவு பிறப்பித்தது. இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.

அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “கிரிவலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள்
முழுவதுமாக அகற்றப்பட்டுள்ளது. சுமார் 30 ஆண்டுகளாக கோயில் இடங்களை 160 கடைகள் ஆக்கிரமித்துள்ளனர். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ள இடங்களை மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்க 24 மணி நேரமும் காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.” என தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, கோயில் தரப்பில் தாக்கல் செய்த அறிக்கையில்:

"நீதிமன்ற உத்தரன்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது. மேலும், வருவாய்த் துறையினர் கிரிவலப் பாதையில் கோயிலுக்கு சொந்தமான இடங்களில் சிலருக்கு பட்டா கொடுத்துள்ளதை ரத்து செய்து அதனை மீண்டும் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை பின்பற்றும் வகையில் இனிவரும் காலங்களில் ஆக்கிரமிப்புகள் செய்யாத அளவிற்கு நடவடிக்கையில் எடுக்கப்பட்டு வருகிறது.” என தெரிவிக்கப்பட்டது.

ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தாக்கல் செய்த அறிக்கையில்,

"நீதிமன்ற உத்தரவின்படி தற்காலிக ஆக்கிரமிப்புகள் முழுவதுமாக அகற்றப்பட்டுள்ளது.
பழனி கோயில் மற்றும் சுற்றுபகுதியை பிளாஸ்டிக், குட்கா மற்றும் புகையிலை
விற்பனைக்கு முழுவதுமாக தடை விதிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" என
தெரிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "பழனி கோயிலை சுற்றியுள்ள வீதிகளை இனிமேல் வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படுத்த கூடாது. இனிவரும் காலங்களில் பழனி கோயிலை சுற்றியுள்ள இடங்களில் எவ்வித ஆக்கிரமிப்புகள் இல்லாத அளவிற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உத்தரவிட்டனர்.

Tags :
DindigulHigh courtMHCmurugan templePALANI
Advertisement
Next Article