Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பழனி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி - ரூ.2.5 கோடி செலுத்திய பக்தர்கள்!

07:12 AM Dec 01, 2023 IST | Web Editor
Advertisement

பழனி மலைக்கோயிலில் உண்டியல் காணிக்கையாக இரண்டரை கோடி ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு
சுவாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இவ்வாறு வரும் பக்தர்கள் மலை மீது சென்று சுவாமி தரிசனம் செய்யும் போது
காணிக்கை செலுத்துவதற்க்கு வசதியாக மலையடிவாரம் பாதவிநாயகர் கோயில் முதல் மலைகோயில் வரை பல்வேறு இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பக்தர்களால் செலுத்திய காணிக்கைகளால் நிறையும் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம். அண்மையில் தைப்பூசத்திருவிழா நடைபெற்று நிறைவடைந்த நிலையில் உண்டியல்கள் நிறைந்ததையடுத்து, உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது.

இதில் ரொக்கமாக 2 கோடியே 58 லட்சத்து 37 ஆயிரத்து 372 ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது. மேலும் தங்கம் 1383 கிராமும், வெள்ளி 12 ஆயிரத்து 992 கிராமும், வெளிநாட்டு கரன்சி 406 நோட்டுகளும் வருவாயாக கிடைத்துள்ளது.

மேலும் உண்டியல் எண்ணும் பணி இன்றும் தொடர்ந்து நடைபெறும் என திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பழனி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் நடைபெற்ற உண்டியல் எண்ணும் பணியில் தேவஸ்தான ஊழியர்கள், வங்கி அதிகாரிகள், கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள், மற்றும் தொண்டு அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர். உண்டியல் எண்ணும் பணி சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது.

Tags :
DonationearnsMoneymurugan templePALANI
Advertisement
Next Article