Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அரண்மனை 4 - புது அப்பேட் கொடுத்த படக்குழு!

01:14 PM Apr 14, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அரண்மனை 4 படத்தின் ரிலீஸ் தேதியையும், படத்தின் முதல் பாடலையும் படக்குழு வெளியிட்டுள்ளது. 

Advertisement

கடந்த 2014-ம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான திரைப்படம் அரண்மனை. இந்த படம் பிரமாண்ட வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து அரண்மனை படத்தின் 2ம் பாகம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை தொடர்ந்து அரண்மனை 3 வெளியானது. இத்திரைப்படத்தில் சுந்தர் சி, ஆர்யா, ராசி கன்னா, ஆண்ட்ரியா, விவேக், யோகிபாபு என தமிழ் திரைப்பட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருந்தனர்.

நகைச்சுவை கலந்த ஒரு திகில் படமாக உருவாகிய இப்படத்திற்கு சுந்தர் சி – குஷ்பூ இணைத்து அவ்னி சினிமேக்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க  உதயநிதி ஸ்டாலின் தனது ‘ரெட்  ஜெயன்ட் மூவிஸ்’  மூலம் உலகம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது.

இந்நிலையில் படத்தின் நான்காம் பாகமும் உருவாகியுள்ளது. இந்த பாகத்திலும் சுந்தர் சி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் தமன்னா, ராஷி கண்ணா, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். அவ்னி சினிமேக்ஸ் பி லிமிடட் சார்பில் குஷ்பு  தயாரிக்கிறார். குஷ்புவின் பிறந்தநாள் அன்று படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

இதனையடுத்து படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் படம் ஏப். 26 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. மேலும்  ஹிப்ஹாப் ஆதி இசையில் படத்தின் முதல் பாடலான 'அச்சச்சோ' பாடலை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இப்பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Tags :
Achacho SongAranmanaiAranmanai 4HipHop AadhiKhushbu SundarRaashi KhannaReleaseSundhar CTamannaa
Advertisement
Next Article