அரையிறுதி ரேசில் தொடரும் பாகிஸ்தான்! அடுத்த இரு போட்டிகளை வென்றே அக வேண்டும்!!
அரையிறுதி ரேசில் தொடரும் பாகிஸ்தான். அடுத்த இரு போட்டிகளையும் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு அந்த அணி உள்ளது.
உலகக் கோப்பையின் 31வது போட்டியில் வங்கதேசம்-பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேசம் அணி 45.1 ஓவரில் 204 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக லிட்டன் தாஸ்- 45, மஹமதுல்லா- 56, ஷகிப் அல் ஹாசன் - 43 ரன்கள் எடுத்தார்கள். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள்.
பாகிஸ்தான் அணி சார்பாக ஷாஹீன் அஃப்ரிடி, மொகமது வாசிம் ஜுனியர் தலா 3 விக்கெட்டுகளும் ஹாரிஸ் ரௌப் 2 விக்கெட்டுகளும் உஸாம மிர், இப்திகார் தலா 1 விக்கும் எடுத்து அசத்தினார்கள்.
205 ரன்கள் என்ற எளிய இலக்குடன் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் 128 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து முதல் விக்கெட்டினை இழந்தனர். அதிகபட்சமாக ஃபகர் ஜமான் 81 ரன்களும் அப்துல்லா ஷபிக்கு 68 ரன்களும் எடுத்தனர். முகமது ரிஸ்வான் 26 ரன்கள் எடுத்தார்.
வங்கதேச அணியின் சார்பில் மெஹதி ஹாசன் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். 32.3 ஓவர் முடிவில் பாக். அணி 205/3 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி புள்ளிப் பட்டியலில் 7வது இடத்தில் இருந்து 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. மீதமிருக்கும் இரு (நியூசிலாந்து, இங்கிலாந்து) போட்டிகளிலும் வெற்றி பெற்றால் அரையிறுதிக்குள் நுழைய பாகிஸ்தான் அணிக்கு வாய்ப்புள்ளது.