பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி! வங்கதேச அணி 32 ஓவர்களில் சுருண்டது!!
வங்கதேச அணியை 105 பந்துகள் மீதமிருந்த நிலையில் 7 விக்கெட்டுகள் வித்யாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றியை ருசித்தது.
உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் -வங்காளதேசம் அணிகள் மோதிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி, முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆனால் வங்காளதேசத்துக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.தொடக்க ஆட்டக்காரர் டான்சித் ஹசன் (0), நஜ்முல் ஹுசேன் சாண்டோ (4), அனுபவ வீரர் முஷ்பிகூர் ரஹீம் (5) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனை தொடர்ந்து பாகிஸ்தானின், தொடக்க ஆட்டக்காரர்களாக அப்துல்லா ஷபீக், பகர் ஷமான் களம் இறங்கினர். இருவரும் நாலாபக்கமும் பந்தை பறக்க விட்டு சிக்ஸ் மழை பொழிந்தனர். இருவரும் வெற்றிகரமாகா அரைசதத்தை கடந்த நிலையில் 9 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்களுடன் 68 ரன்கள் எடுத்த நிலையில், அப்துல்லா ஷபீக் ஆட்டமிழந்தார். பகர் ஷமான் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்தார். முதல் விக்கெட்டுக்கு களம் இறங்கிய பாபர் அஜாம் 9 ரன்கள் சேர்த்த நிலையில் பெவிலியன் திரும்பினார். இதனை அடுத்து பகர் ஷமான் 7 சிக்சர்கள், 3 பவுண்டரிகளுடன் அதிரடியாக 81 ரன்கள் சேர்த்த நிலையில் கேச் ஆகி ஆட்டமிழந்தார். இவர்களை தொடர்ந்து களம் இறங்கிய முகமது ரிஸ்வானும், இப்திகர் அகமதுவும் நிதானமாக ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். இறுதியாக 32 ஓவர்கள் 3 பந்துகள் முடிவடைந்த நிலையில், 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் இலக்கை எட்டி வெற்றியை ருசித்தனர்.