ஒருநாள் கிரிக்கெட் பந்துவீச்சில் பாக்.வீரர் புது சாதனை!
ஒருநாள் கிரிக்கெட் பந்துவீச்சில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் ஷா அப்ரிடி படைத்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் -வங்காளதேசம் அணிகள் மோதிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி, முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆனால் வங்காளதேசத்துக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.தொடக்க ஆட்டக்காரர் டான்சித் ஹசன் (0), நஜ்முல் ஹுசேன் சாண்டோ (4), அனுபவ வீரர் முஷ்பிகூர் ரஹீம் (5) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியல் வருமாறு:
51 - ஷாஹீன் ஷா அப்ரிடி*
52 - மிட்செல் ஸ்டார்க்
54 - ஷேன் பாண்ட்
54 - முஸ்தபிசுர் ரஹ்மான்
55 - பிரட் லீ
56 - டிரென்ட் போல்ட்
56 - முகமது ஷமி
57 - ஜஸ்பிரித் பும்ரா
57 - மாட் ஹென்றி