Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிடும் முதல் இந்துப் பெண் சவீரா பிரகாஷ் - யார் இவர்?

01:35 PM Dec 27, 2023 IST | Web Editor
Advertisement

பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட முதன்முறையாக இந்து பெண் ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். 

Advertisement

பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 8-ந்தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.  இந்த தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் டிச.20-ந்தேதி தொடங்கியது.  இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-என்,  இம்ரான் கான் தலைமையிலான தெக்ரீக்-இ-இன்சாப் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.

இந்த தேர்தலில் முதன்முதலாக இந்து பெண் ஒருவர் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அவர் பெயர் சவீரா பிரகாஷ்.  இவர் கைபர் பக்துன்காவின் புனர் மாவட்டத்தில் உள்ள தொகுதியில் பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.  இவரது தந்தை ஓம் பிரகாஷ் ஓய்வு பெற்ற மருத்துவர்.

இதையும் படியுங்கள்:  ஹரியானாவில் மல்யுத்த வீரர்களை சந்தித்த ராகுல்காந்தி!

சவீரா பிரகாஷ் கைபர் பக்துன்காவின் அபோதாபாத் சர்வதேச மருத்துவ கல்லூரியில் கடந்த ஆண்டு படிப்பை முடித்தார்.  பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் பொது தொகுதிகளில்  5 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சவீரா பிரகாஷ் அளித்துள்ள பேட்டியில் "தனது தந்தையின் வழியை பின்பற்றி பின் தங்கிய மக்களுக்காக பணியாற்றுவேன்.  பெண்கள் முன்னேற்றத்துக்காகவும்,  அவர்களின் உரிமைக்காகவும் பாடுபடுவதற்காகவும் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்துள்ளேன்" என தெரிவித்தார்.

Tags :
Bunergeneral electionHindu womennews7 tamilNews7 Tamil UpdatespakistanPakistan ElectionSaveera Parkash
Advertisement
Next Article