Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு புதிய இயக்குநர் நியமனம்..!

11:49 AM Nov 16, 2023 IST | Web Editor
Advertisement

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இயக்குனராக முன்னாள் கேப்டன் முகமது ஹபீஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 

Advertisement

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தலைமையில் களம் இறங்கியது.  அதில் 9 லீக் போட்டிகளில் களம் இறங்கி 4 போட்டிகளில் வெற்றி பெற்றது.  அதேபோல 5 போட்டிகளில் தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 5 வது இடத்தை பிடித்தது.

இதனால் பாகிஸ்தான் அணியால் அரையிறுதி சுற்றுக்கு கூட  முன்னேற முடியவில்லை. அதேபோல ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இதற்கு பொறுப்பேற்கும் விதமாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக பாபர் அசாம் நேற்று அறிவித்தார். அதேபோல அனைத்து வகை கிரிக்கெட்டுக்கான கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணிக்கு புதிதாக வரும் கேப்டனுக்கு பேட்ஸ்மேனாக எனது முழு அர்ப்பணிப்பையும் வழங்குவேன் எனவும் பாபர் அசாம் தெரிவித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கேப்டன் பொறுப்பு வகித்து வந்த பாபர் அசாம் ஒரு நாள் போட்டிகளில் 42 போட்டிகளுக்கு கேப்டன் பொறுப்பு வகித்து அதில் 26 வெற்றிகளும், 14 தோல்விகளும் பெற்றுள்ளார். ஒரு ஆட்டம் டையிலும், ஒரு ஆட்டம் முடிவில்லாமலும் போனது.

மேலும் டெஸ்ட் போட்டிகளில் 20 போட்டிகளுக்கு கேப்டன் பொறுப்பு வகித்து அதில் 10 வெற்றிகளும், 6 தோல்விகளும் பெற்றுள்ளார். டி20 போட்டிகளில் 71 போட்டிகளுக்கு கேப்டன் பொறுப்பு வகித்து அதில் 42 வெற்றிகளும், 22 தோல்விகளும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து  பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக டி20 போட்டிகளுக்கு சாஹின்ஷா அஃப்ரிடியும், டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டனாக ஷான் மசூதும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான கேப்டன் இன்னும் அறிவிக்கப்படவில்லை.  இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இயக்குனராக முன்னாள் கேப்டன் முகமது ஹபீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags :
babar azamCricket World Cup 2023directorpakistanPakistan Cricket BoardPakisthanworld cup
Advertisement
Next Article