Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

PAK vs SA | ஒருநாள் தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான் அசத்தல்!

08:22 AM Dec 23, 2024 IST | Web Editor
Advertisement

பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா இடையேயான கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரை பாகிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது.

Advertisement

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி இந்த தொடரில் மூன்று டி20 போட்டிகள், 3 ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதன் ஒருபகுதியாக முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-0 என தென் ஆப்பிரிக்கா அபாரமாக கைப்பற்றியது.

இதையடுத்து ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வந்தன. இந்த தொடரில் 2 போட்டிகளில் பாகிஸ்தான் அணி ஏற்கெனவே இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.

நேற்றை போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. போட்டி தொடங்கும் முன்னர் மழை பெய்த காரணத்தால் இந்த போட்டி 47ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 47 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 308 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சைம் அயூப் 101 ரன்கள் எடுத்தார்.தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரபாடா 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து 309 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 42 ஓவர்களில் அனைத்து விக்கெடையும் இழந்து 271 ரன்னுக்கு மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக கிளாசென் 81 ரன்கள் எடுத்தார். இதன் பாகிஸ்தான் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது. பாகிஸ்தான் அணியின் சைம் அயூப் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்றார். தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் வரும் 26ம் தேதி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
odiPAK vs SAPakistan WinSA vs Pak
Advertisement
Next Article