பஹல்காம் தாக்குதல் தொடர்பான விசாரணை - 3D தொழில்நுட்பத்தை கையாளும் NIA!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தாக்குதல் தொடர்பான விசாரணையில் முன்னதாக தாக்குதல் செய்த மூவரின் மாதிரி வரைபடங்கள் வெளியிடப்பட்டது. தொடர்ந்து அம்மூவரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டது.
அதன் பின்பு அவ்வப்போது தாக்குதல் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி வந்தன. குறிப்பாக அண்மையில் தாக்குதல் நடத்தப்பட்ட பைசரன் சுற்றுலா தளத்தில் இருந்து ஜிப்லைனில் பயணிக்கும் ஒருவரின் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே ஒரு பக்கம் இந்த தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ) விசாரணை நடத்தி வந்தது.
இந்த நிலையில் தேசிய புலனாய்வு முகமை தனது விசாரணையில் தற்போது 3D தொழில்நுட்ப முறையை கையாண்டு வருகிறது. தாக்குதலின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்கள் மற்றும் அங்கிருந்து உயிர் தப்பியவர்களின் கூறிய சாட்சியை கொண்டு 3D முறையில் நடந்த சம்பவத்தை மீள் உருவாக்கம் செய்து விசாரித்து வருகின்றனர்.