Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கோவையை சேர்ந்த வள்ளி ஒயிற்கும்மி ஆசிரியர் பத்திரப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு.!

10:27 PM Jan 25, 2024 IST | Web Editor
Advertisement

கோவையை சேர்ந்த வள்ளி ஒயிற்கும்மி ஆசிரியர் பத்திரப்பனுக்கு பத்மஸ்ரீ விருதினை மத்திய அரசு அறிவித்துள்ளது.

Advertisement

குடியரசுத் தின விழா  நாளை இந்தியா முழுவது நாளை கொண்டாடப்படுகிறது. குடியரசுத் தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு டெல்லியில் சிறப்பாக குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நாளை நடைபெற உள்ளன. குடியரசு தினத்தை முன்னிட்டு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள், முப்படைகளின் அணிவகுப்பு உள்ளிட்டவை நடைபெறும். குடியரசு தின கொண்டாட்டங்களில் பங்கேற்க சிறப்பு அழைப்பாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த குடியரசுத் தின விழாவை முன்னிட்டு நாளை குடியரசுத் தின மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ளது.  இந்த நிலையில் 2024ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் குறித்து பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் 34பேருக்கான பத்ம விருதுகள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி கோவையை சேர்ந்த வள்ளி ஒயிற்கும்மி ஆசிரியர் பத்திரப்பனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கும்மி நடனத்தில் சிறந்து விளங்கியதற்காகவும், பெண்களுக்கு கும்மி பயிற்சி அளித்ததற்காகவும் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Draoupadi MurmuPadma AwardsPresident
Advertisement
Next Article