Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் இன்று பொறுப்பேற்பு!

உச்சநீதிமன்றத்தின் 52-வது புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் இன்று பதவி ஏற்க உள்ளார்.
08:25 AM May 14, 2025 IST | Web Editor
உச்சநீதிமன்றத்தின் 52-வது புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் இன்று பதவி ஏற்க உள்ளார்.
Advertisement

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா 2024ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி பதவி ஏற்றார். அவரது பதவிக்காலம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. சஞ்சீவ் கண்ணா ஓய்வு பெற்றதை தொடர்ந்து, இந்தியாவின் 52ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாயை நியமித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஏப்.29 ஆம் தேதி உத்தரவிட்டார். அதன்படி, உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் இன்று பதவி ஏற்க உள்ளார்.

Advertisement

குடியரசு மாளிகையில் நடக்கும் விழாவில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். 2019 மே 24ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட பி.ஆர்.கவாய், இந்த ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி ஓய்வு பெறுகிறார்.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த கவாய், பணமதிப்பிழப்பு உறுதி செய்த தீர்ப்பு, தேர்தல் பத்திரம் செல்லாது என்ற தீர்ப்பு உள்ளிட்ட முக்கிய தீர்ப்புகள் வழங்கப்பட அமர்வில் இடம்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
new Chief JusticeP.R.KawaiSupreme court
Advertisement
Next Article