Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கடலில் கவிழ்ந்த படகு - 15 மணி நேரம் நீந்தி உயிருக்கு போராடிய 3 மீனவர்கள் மீட்பு!

08:29 AM Jun 17, 2024 IST | Web Editor
Advertisement

வேதாரண்யம் அருகே கடலில் படகு கவிழ்ந்து சுமார் 15 மணி நேரம் உயிருக்கு போராடிய 3 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Advertisement

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த ரவி என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் ரவி,  ரகுபதி,  ஜெயபால் ஆகிய மூவரும் நேற்று முன்தினம் மதியம் ஒரு மணியளவில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர்.   மீன்பிடித்து விட்டு நேற்று காலை 6 மணிக்கு கரை திரும்ப வேண்டிய நிலையில்,  படகு கரை திரும்பாததால் புஷ்பவனம் பகுதி மீனவர்கள் படகில் சென்று அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

புஷ்பவனம் பகுதி மீனவர்கள் தேடி சென்றபோது,  படகில் ஓட்டை விழுந்ததால் படகு கவிழ்ந்ததும்,  படகில் சென்ற மூவரும் ஐஸ் பாக்ஸை பிடித்துக் கொண்டு நீந்தி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்ததும் தெரியவந்தது.  இதனை பார்த்த மீனவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு, கடலில் கவிழ்ந்து கிடந்த படகையும் கட்டி இழுத்துக் கொண்டு கரைக்கு வந்து சேர்ந்தனர்.

கடலில் சுமார் 15 மணி நேரம் ஐஸ் பாக்ஸை பிடித்துக் கொண்டு நீந்தியதால் அவர்களின் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தனையடுத்து,  அவர்களை வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகளும், வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
Fishermenhospitaltreatmentvedaranyam
Advertisement
Next Article