ஆவடியில் துர்நாற்றம் வீசும் 'நம்ம டாய்லெட்' - பொதுமக்கள் அவதி!
சென்னையை அடுத்த ஆவடியில் 'நம்ம டாய்லெட்' துர்நாற்றம் வீசி வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தும் பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேட்டால் ஏற்படும் பல்வேறு நோய்களிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் கொண்டு வரப்பட்டது தான் இந்த 'நம்ம டாய்லெட்' திட்டம்.
இந்த திட்டத்தின் மூலம் சென்னை ஆவடி மாநகராட்சியிலும் கழிவறை கட்டப்பட்டது. இதனை அருகில் உள்ள பொதுமக்கள் மற்றும் வியாபாரம் செய்யும் பெண்கள் அவசர காலகட்டத்திற்கு அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த 'நம்ம டாய்லெட்' கழிவறை சுத்தம் செய்யாமல் துர்நாற்றம் வீசி வருகிறது. குழாய்கள் உடைந்தும் சாலையில் கழிவுநர்கள் சென்று வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: களமசேரி குண்டுவெடிப்பு – உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்வு!
மேலும் பொதுக்கூட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுவதற்கு முக்கிய இடத்திற்கு
அருகில் 'நம்ம டாய்லெட்' அமைக்கப்பட்டிருக்கிறது. பொதுக் கூட்டத்திற்கும்,
ஆர்ப்பாட்டத்திற்கும் வரக்கூடிய கட்சியினர்கள் நம்ம டாய்லெட்டை தான்
பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்த 'நம்ம டாய்லெட்' சிதலம் அடைந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஆவடி மாநகராட்சிக்கு அருகில் இருந்தும் மாநகராட்சி சுகாதார அதிகாரி எதையும் கண்டு கொள்வதில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலும் ஆவடி மாநகராட்சி ஒட்டிய பகுதிகளில் ஆங்காங்கே குப்பைகள் மற்றும் மழைநீர் தேங்கி நிற்பதால் நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனை ஆவடி மாநகராட்சியின் சுகாதார அதிகாரி உடனடியாக சீர் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.