Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘வர வர நம்ம நிலைமை ரொம்ப மோசமா போகுதே’ - நூதன முறையில் பெண் தேடும் 90’ஸ் கிட்!

07:01 PM Feb 19, 2024 IST | Web Editor
Advertisement

மணமகள் தேவை என முழு விவரங்களையும் பேனர் அடித்து, தனது ஆட்டோவில் வைத்து சவாரிகளை மேற்கொண்டு வரும் இளைஞரின் நூதன செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Advertisement

சமீப காலமாகவே 90’ஸ் கிட்ஸ் அதாவது 1990 களில் பிறந்த இளைஞர்களுக்கு பெண் கிடைப்பது என்பது பெரும் கஷ்டமாக உள்ளது. இது அண்மை காலமாகவே பேசு பொருளாகியுள்ளது. இது சம்பந்தமான பல மீம்ஸ்களும் இணையதளங்களில் வைரலாவது குறிப்பிடதக்கது. இந்நிலையில் மத்தியப்பிரதேசத்தில் ஒரு இளைஞர் நூதன முறையில் பெண் தேடும் செயல் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

மத்தியபிரதேசம் தமோ பகுதியில் வசித்து வருபவர் தீபேந்திர ரத்தோர். 29 வயதான இவர் ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் திருமணத்திற்காக பல இடங்களில் பெண் தேடியும் மணப்பெண் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், இவர் ஒரு நூதன முறையை கையாண்டுள்ளார். பெண் தேவை என தனது முழு விவரங்களையும் பேனர் அடித்து தனது ஆட்டோவில் வைத்துகொண்டு சவாரிகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது;

“நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். எனது பெற்றோர் கடவுளை வழிபடுவதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அவர்களது விருப்பம் அது. எனக்காக பெண் தேட அவர்களுக்கு நேரம் இல்லை. அதனால் எனக்கு நானே வாழ்க்கை துணையை தேடிக் கொள்ள முடிவு செய்தேன். அதை கருத்தில் கொண்டு ‘திருமணத்துக்கு வரன் தேடும்’ குழு ஒன்றில் சேர்ந்தேன். அதன் மூலம் எனக்கு பலன் கிடைக்கவில்லை. அதனால் நானே அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளேன்.

எனது பெயர், பிறந்த தேதி மற்றும் நேரம், கல்வித்தகுதி, உயரம், உடல் எடை, ரத்த வகை, தொழில் என என்னை குறித்த அனைத்து விவரங்களையும் உள்ளடக்கி விளம்பர பதாகை ஒன்று தயார் செய்தேன். அதை எனது ஆட்டோவில் கட்டிவைத்துள்ளேன். எங்கள் ஊரில் என்று இல்லாமல் பிற பகுதியை சேர்ந்த பெண் என்றாலும் திருமணம் செய்து கொள்ள நான் தயார். சாதி, மாத பாகுபாடு நான் பார்க்கவில்லை. அதனால் அனைவரும் என்னை அணுகலாம். சமூகத்தில் மணமகள் போதிய அளவில் இல்லை. அதனால் தான் இந்த முயற்சி. என்னை திருமணம் செய்து கொள்பவரை கண் கலங்காமல் பாதுகாப்பேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆட்டோ ஓட்டுனர் பற்றிய தகவல்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags :
90ஸ் கிட்ஸ்Bride NeededMadhya pradeshMarriage
Advertisement
Next Article