’காந்தாரா சாப்டர் 1’ படத்தின் ஓடிடி ரிலீஸ்.. எங்கு, எப்போது பார்க்கலாம்?
கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘காந்தாரா’. இதன் வெற்றியை தொடர்ந்து, இப்படத்தின் முன்கதையாக ‘காந்தாரா சாப்டர் 1’ கடந்த அக்டோபர் 1 ஆம் நாள் வெளியானது.
விஜய் கிரகந்தூர் தயாரிப்பில் உருவான இந்த படத்தை ரிஷப் ஷெட்டியே இயக்கி நடித்திருந்தார். புராணங்களால் நிரம்பிய கதைக்களத்தில், கண்கவர் காட்சியமைப்புகளுடன், பார்வையாளர்களை தெய்வீகமும் சக்தியும் நிறைந்த பண்டைய உலகத்துக்குக் கொண்டு சென்றது.
தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியான ‘காந்தாரா சேப்டர் 1’ இதுவரை சுமார் ரூ 800 கோடி வரை வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் ‘காந்தாரா சேப்டர் 1’ படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் படி இப்படம் வரும் (அக்) 31 ஆம் நாள் அமேசான் பிரைமில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியகிறது.