’கிஸ்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் கவின். இவர் லிஃப்ட் படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். அவரது நடிப்பு மக்களை வெகுவாக கவர்ந்தது. அதனைத்தொடர்ந்து டாடா, ஸ்டார், பிளடி பெக்கர் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.
இதனை தொடர்ந்து, பிரபல நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் தனது அறிமுக இயக்கிய கிஸ் படத்தில் கவின் நடித்தார். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தில் கவினுடன் இணைந்து ப்ரீத்தி அஸ்ரானி, விடிவி கணேஷ், ராவ் ரமேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
செப்டம்பர் 19ஆம் தேதி வெளியானது. காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படமானது, ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்த நிலையில் ‘கிஸ்’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, வரும் நவம்பர் 7ம் தேதி ஜீ5 தளத்தில் வெளியாக உள்ளதாக ஜீ5 ஓடிடி தளம் வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.