'நேசிப்பாயா' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனான ஆகாஷ் முரளி நடிகராக அறிமுகமான திரைப்படம் நேசிப்பாயா. இப்படத்தை விஷ்ணு வரதன் இயக்கியிருந்தார். இப்படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும், இதில் சரத்குமார், குஷ்பு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படம் காதலை மையமாகக் கொண்டு உருவாகி இருந்தது.
இதையும் படியுங்கள் : ‘ஜன நாயகன்’ படத்தின் டீசர் எப்போது? வெளியான தகவல்!
ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் இருவரும் கல்லூரியில் படித்த போது காதலித்து வந்த நிலையில் பிரிந்தனர். போர்ச்சுகல் நாட்டில் ஒரு கொலைக் குற்றத்திற்காக அதிதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். அது தெரிந்த ஆகாஷ் காதலியைக் காப்பாற்ற போர்ச்சுகல் செல்கிறார். அவரது கைதுக்குப் பின் உள்ள மர்மங்களை அங்குள்ள வழக்கறிஞரான கல்கி கோச்சலின் உதவியுடன் கண்டுபிடிக்க முயல்கிறார். காதலி அதிதியைக் காப்பாற்றி மீட்டாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதி கதை.
பொங்கல் வெளியீடாக கடந்த ஜன. 14 ஆம் தேதி திரைக்கு வந்த இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் மே 16 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.