Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கன்னட படங்களை வாங்குவதற்கு #OTT நிறுவனங்கள் தயக்கம் - #NationalAwardWinner ரிஷப் ஷெட்டி பேட்டி!

02:59 PM Aug 17, 2024 IST | Web Editor
Advertisement

கன்னட படங்களை வாங்குவதற்கு பிரபல ஓடிடி தளங்கள் மறுக்கின்றன அதனால் வேறு வழியில்லாமல் யூடியூபில் பதிவேற்றும் நிலை ஏற்பட்டுள்ளது என தேசிய விருது வென்ற நடிகரும் இயக்கநருமான ரிஷப் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

Advertisement

கன்னட திரையுலகில் மிக முக்கியமான நடிகரா இருப்பவர் ரிஷப் ஷெட்டி. இவர் நடித்த காந்தாரா திரைப்படம் கன்னடம், தெலுங்கு, மலையாளம், தமிழ் என தென்னிந்திய மொழிகளை தாண்டி இந்திய அளவில் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்தார். இந்த நிலையில் 2022 ம் ஆண்டு  வெளியான காந்தாரா படத்திற்கு சிறந்த நடிகர் விருது ரிஷப் ஷெட்டிக்கு வழங்கப்பட்டுள்ளது.

சின்ன சின்ன வேலை பார்த்துக் கொண்டே பெங்களூரில் உள்ள அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரியில் திரைப்பட இயக்கத்தில் டிப்ளமோவும் பட்டம் பெற்றவர் ரிஷப் ஷெட்டி . இதன் பின்னர் கன்னட திரைப்படத் துறையில் கிளாப் பாய், ஸ்பாட் பாய், உதவி இயக்குநராகப் தனது திரைப்பயணத்தை தொடங்கினார்.

ஆரம்பத்தில் வில்லன் கதாபாத்திரத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமான ரிஷப் ஷெட்டி அதன் பிறகு முக்கிய வேடங்களில் நடித்து கவனம் பெற்றார். இதன் பிறகு ரிஷப் ஷெட்டி இயக்கிய படமான  சர்க்காரி ஹி. பிரா. ஷாலே, காசர்கோடு, கொடுகே: ராமண்ணா ராய்  படம் விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்று, சிறந்த குழந்தைகள் படத்திற்கான தேசிய விருதை வென்றது . இப்படத்தின் மூலம் இயக்குநராக ரிஷப் ஷெட்டி முதல் தேசிய விருதை வென்றார்.

தற்போது கன்னட திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகர் மற்றும் இயக்குநராக இருக்கு ரிஷப் ஷெட்டி கன்னட சினிமாக்களை வாங்குவதற்கு பிரபல ஓடிடி தளங்கள் முன் வருவதில்லை என தெரிவித்துள்ளார். எங்களது படங்கள் படங்கள் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வெற்றி பெறுகின்றன. ஆனால் அவற்றை  ஓடிடி தளங்கள் வாங்க மறுப்பதால் வேறு வழியில்லாமல் யூடியூபில் பதிவேற்றும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.  ரிஷப் ஷெட்டியின் கருத்து சினிமா வட்டாரங்களில் பேசு பொருளாகியுள்ளது.

Tags :
Kanna FilmsKANTHARAOTT PLATFORMSRishab Shetty
Advertisement
Next Article