Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஓசாக் (OSAC) இந்தியா வருடாந்திர கூட்டம் - தொடங்கி வைத்தார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!

01:59 PM Oct 25, 2024 IST | Web Editor
Advertisement

அரசு-தனியார் பாதுகாப்பு ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கான ஓசாக் (OSAC) இந்தியா வருடாந்திர கூட்டத்தை அமெரிக்க துணைத் தூதர், தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தொடங்கி வைத்தன‌ர்.

Advertisement

அமெரிக்க அரசு மற்றும் இந்தியா முழுவதும் உள்ள அமெரிக்க தனியார் நிறுவன பாதுகாப்பு அலுவலர்களுக்கிடையே ஒத்துழைப்பை வளர்க்கும் நோக்கில் சென்னையில் அக்டோபர் 24ம் தேதி நடைபெற்ற ஓசாக் இந்தியா வருடாந்திர‌ கூட்டத்தை சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதர் கிறிஸ் ஹோட்ஜஸ் மற்றும் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் துறை மற்றும் டிஜிட்டல் சேவைகள் அமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தனர்.

ஒசாக் (OSAC) என்பது அமெரிக்க வெளியுறவுத் துறையின் உறவுநய‌ பாதுகாப்பு சேவைப் பிரிவு (DSS) மற்றும் வெளிநாட்டில் இயங்கும் அமெரிக்க நிறுவனங்களின் பாதுகாப்பு நிபுணர்களுக்கு இடையிலான அரசு-தனியார் கூட்டாண்மை ஆகும். ஒசாக் உறுப்பினர்கள் பாதுகாப்பு குறித்த‌ தகவல்களை சரியான நேரத்தில் பகிர்ந்து கொள்வதோடு வெளிநாடுகளில் அமெரிக்க உறவுகளைப் பாதுகாப்பதற்கான‌ வலுவான பிணைப்புகளைப் பராமரிக்கிறார்கள்.

பயிற்சிகள், ஆலோசனைகள், நிகழ்ச்சிகள், பாதுகாப்பு எச்சரிக்கைகள் மற்றும் பகுப்பாய்வு ஆகியவற்றில் அமெரிக்க மற்றும் இந்திய தனியார் துறை பங்குதாரர்களுடனான‌ ஒத்துழைப்பை வலுப்படுத்தவதற்கான வாய்ப்பாக இக்கூட்டம் சென்னையிலுள்ள அமெரிக்க துணைத் தூதரகம் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள தூதரக மற்றும் பெருநிறுவன பாதுகாப்பு அலுவல‌ர்களுக்கு அமைந்தது.

அமெரிக்க துணைத் தூதரகத்தைச் சேர்ந்த உறவுநய‌ பாதுகாப்பு சேவைப் பிரிவு மண்டல அலுவலர் ஸ்காட் ஷானர் கூறுகையில், “பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் பங்குதாரர்களாக, சமநிலை முறைமைகளை முன்மாதிரியாகக் கொண்டு இந்திய தனியார் துறையுடன் இணைந்து நம்பிக்கையை உருவாக்க, மற்றும் அச்சுறுத்தல்களை அடையாளம் கண்டு, கண்காணித்து, பாதுகாப்பு சிக்கல்களை முன்கூட்டியே கணிக்க நாங்கள் முயற்சிக்கிறோம்," என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாகராஜன், “இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு சென்னையில் நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. பன்முகத்தன்மை, சமத்துவம், உள்ளடக்கம் மற்றும் அணுகல் (DEIA) ஆகியவை தமிழ்நாட்டில் சிறப்பாக பராமரிக்கப்படுகின்றன. இவற்றையே ஓசாக்கும் பின்பற்றுவது மகிழ்ச்சி. இன்றைய நிகழ்வு அமெரிக்கா மற்றும் இந்தியா இடையேயான வலுவான வர்த்தக மற்றும் ராஜதந்திர உறவை பிரதிபலிக்கிறது. அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ள இன்றைய காலகட்டத்தில், நாம் நம்மைப் பாதுகாப்பாக வைத்திருக்க தினமும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். தனியார்-அரசு கூட்டாண்மைக்கான சிறந்த உதாரணமாக ஓசாக் திகழ்கிறது," என்றார்.

அமெரிக்க தூதரகத்தை சேர்ந்த உறவுநய‌ பாதுகாப்பு சேவைப் பிரிவு மூத்த பிராந்திய அலுவலர் கிறிஸ்டோபர் கில்லிஸ் பேசுகையில், "பாதுகாப்பான செயல்பட்டு சூழலை உறுதி செய்வதற்காக அமெரிக்க அரசு மற்றும் தனியார் துறைக்கு இடையேயான தொடர்பை வலுப்படுத்துவதற்காக‌ இன்றைய மாநாடு விளங்குகிறது," என்றார்.

ஓசாக் இந்தியா சென்னை கிளையின் தனியார் துறை இணைத் தலைவர் ஜான் பால் மாணிக்கம் கூறுகையில், "இந்தியாவில் செயல்படும் அமெரிக்க நிறுவனங்களின் பாதுகாப்பு வல்லுநர்களிடையே சிறந்த நடைமுறைகள் மற்றும் ஒத்துழைப்பை ஒசாக் இந்தியா கிளைகள் மேம்படுத்துகின்றன" என்றார்.

ஒசாக் சென்னை கிளை பற்றி:

அமெரிக்க துணைத் தூதரகத்தைச் சேர்ந்த உறவு நய‌ பாதுகாப்பு சேவைப் பிரிவு மண்டல அலுவலர் ஸ்காட் ஷானர் மற்றும் ஜான் பால் மாணிக்கம் தலைமையிலான ஓசாக் இந்தியா சென்னை கிளை இந்தியாவின் பழமையான ஓசாக் கிளைகளில் ஒன்றாகும்.

ஓசாக் இந்தியா பெங்களூரு கிளை பற்றி: அமெரிக்க துணைத் தூதரகத்தைச் சேர்ந்த உறவுநய‌ பாதுகாப்பு சேவைப் பிரிவு மண்டல அலுவலர் ஸ்காட் ஷானர் மற்றும் டெல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் பிராந்திய பாதுகாப்பு தலைவரான‌ அனுபவ் மிஸ்ரா தலைமையிலான‌ ஓசாக் பெங்களூரு கிளை இந்தியாவில் அதிக‌ உறுப்பினர்களை கொண்ட கிளைகளில் ஒன்றாகும்.

தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் துறை மற்றும் டிஜிட்டல் சேவைகள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதர் கிறிஸ் ஹோட்ஜஸ், அமெரிக்க தூதரகத்தை சேர்ந்த உறவுநய‌ பாதுகாப்பு சேவைப் பிரிவு மூத்த பிராந்திய அலுவலர் கிறிஸ்டோபர் கில்லிஸ், அமெரிக்க துணைத் தூதரகத்தின் உறவுநய‌ பாதுகாப்பு சேவைப் பிரிவு மண்டல அலுவலர் ஸ்காட் ஷானர், மற்றும் ஓசாக் இந்தியா சென்னை கிளையின் தனியார் துறை இணைத் தலைவர் ஜான் பால் மாணிக்கம் உள்ளிட்ட பலர் சென்னையில் அக்டோபர் 24-ம் தேதி நடைபெற்ற ஓசாக் இந்தியா வருடாந்திர‌ கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags :
AmericaAnnual MeetingDMKNews7TamilOSACPalanivel Thiyagaran
Advertisement
Next Article