நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை!
நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது :
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. வடதமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், தென்தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்றும் நாளையும் (ஜூன் 22, 23) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : அதிக போதைக்காக விஷச்சாராயத்தில் மினரல் டர்பன்டைன் ஆயில் கலப்பு - குற்றவாளிகள் அதிர்ச்சி வாக்குமூலம்!
இதையடுத்து, நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 12 முதல் 20 செ.மீ. வரை மழைப்பொழிவு பதிவாகக் கூடுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் (ஜூன் 22, 23) ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 24, 25, 26 ஆகிய 3 நாட்கள் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.