Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னை உள்பட 6 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்! இந்திய வானிலை ஆய்வு மையம்!

05:22 PM Jan 04, 2024 IST | Web Editor
Advertisement

சென்னை உள்பட 6 மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. 

Advertisement

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு,  கேரளா,  புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.  அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழ்நாடு,  புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அதே சமயம் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஜனவரி 6 ஆம் தேதி வரை (06.01.2024) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், தற்போது சென்னையில் கோயம்பேடு,  நுங்கம்பாக்கம்,  வள்ளுவர்கோட்டம், வேப்பேரி, புரசைவாக்கம், போரூர்,  மீனம்பாக்கம்,  பல்லாவரம், பொழிச்சலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனிடையே, அடுத்து வரக்கூடிய மூன்று மணி நேரத்திற்கு சென்னை,  செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,  திருவள்ளூர்,  ராணிப்பேட்டை,  திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்து இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

Tags :
#ClimateChennai RMCIMDIMD issues orange alertnews7 tamilNews7 Tamil UpdatesRainRain UpdateWeatherWeather Update
Advertisement
Next Article