தமிழ்நாட்டுக்கு ஆரஞ்ச் அலர்ட் | 22, 23ஆம் தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு...
தமிழ்நாட்டுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்ததுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்றி நிலவுகிறது. தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்றி நிலவுகிறது.
இதன் காரணமாக கடலோர தமிழகத்தில் அநேக இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது.
அதன்படி சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு பரவலாக மழை பெய்தது. எழும்பூர், புரசைவாக்கம், சென்னை சென்டிரல், சேத்துப்பட்டு, கிண்டி, ராயப்பேட்டை உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது
இந்நிலையில், தமிழ்நாட்டில் வரும் 22, 23ஆம் தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அதனை ஒட்டி ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்ததுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.