Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இந்தி திணிப்பு எதிர்ப்பு : கலி பூங்குன்றன் உள்ளிட்டோர் மீதான வழக்கு ரத்து!

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதற்காக திராவிடர் கழக துணைத்தலைவர் பூங்குன்றன் உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
03:21 PM Feb 25, 2025 IST | Web Editor
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதற்காக திராவிடர் கழக துணைத்தலைவர் பூங்குன்றன் உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement

இந்தி திணிப்புக்கு எதிராக கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் எழும்பூர் ரயில் நிலையம் எதிரே போராட்டம் நடைபெற்றது.

Advertisement

இது தொடர்பாக கி.வீரமணி உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்ட தி.க.வினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனிடையே, துணைத்தலைவர் பூங்குன்றன் உள்ளிட்ட மூன்று பேர் மீது மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், தங்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி பூங்குன்றன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்த போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கவில்லை எனவும் பொதுமக்களுக்கு எந்த இடையூறுமின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பூங்குன்றன் உள்ளிட்டோர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Tags :
Dravidar KazhagamHindi ImpositionKali Poongundranmadras HC
Advertisement
Next Article