Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி - நாடாளுமன்ற இரு அவைகளும் முன்கூட்டியே ஒத்திவைப்பு!

06:25 PM Aug 09, 2024 IST | Web Editor
Advertisement

ஆகஸ்ட் 12-ஆம் தேதி (12.08.2024) வரை நடைபெறவிருந்த நாடாளுமன்ற இரு அவைகளும் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக முன்கூட்டியே ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisement

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 22ஆம் தேதி முதல் இரு அவைகளிலும் நடைபெற்று வந்தது. இந்த கூட்டத்தொடர் தொடங்கியதும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு பட்ஜெட் உரை மீதான விவாதம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்றைய அவை நடவடிக்கையின் போது, எதிர்க்கட்சிகள் பேச வாய்ப்பளிக்கப்படவில்லை என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள் குற்றம்சாட்டினர்.

‘காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு போதிய மரியாதை அளிக்கப்படவில்லை, ஆளும் கட்சியினர் அவரை தவறான முறையில் பேசுகின்றனர். அவருக்கு பேச வாய்ப்பளிக்கப்படவில்லை’ என்று காங்கிரஸ் எம்.பி. ஜெயராம் ரமேஷ் கூறினார். இதையடுத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

வெளியே வந்த சமாஜ்வாதி எம்பி ஜெயா பச்சன் செய்தியாளர்களுடன் பேசுகையில்,  ‘எதிர்க்கட்சி எம்பிக்கள் பேசும்போது மைக் அணைக்கப்படுகிறது. பெண் எம்பிக்களுக்கு மரியாதை வழங்கப்படவில்லை. இதற்கு அவைத் தலைவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும்’ என்றார்.

நேற்று வினேஷ் போகத் தகுதி நீக்கம் குறித்து விவாதிக்க மறுத்ததால் எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அவையில் தனக்கு போதிய ஆதரவு இல்லை என்று கூறி அவைத் தலைவர் ஜகதீப் தன்கரும் சிறிது நேரம் அவையில் இருந்து வெளியேறினார். தொடர்ந்து இன்றும் அவைத் தலைவர் ஜகதீப் தன்கருக்கும் எதிர்க்கட்சி எம்பிக்களுக்கும் தொடர் வார்த்தை மோதல் நடைபெற்றது.

இதனை அடுத்து, தொடர் அமளி, வார்த்தை மோதல், வெளிநடப்பு காரணமாக மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மக்களவையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வருகிற திங்கட்கிழமை வரை நடைபெறவிருந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், எதிர்க்கட்சிகளின் அமளியால் ஒரு நாள் முன்னதாகவே நிறைவுபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Jagdeep DhankharOppositionparliamentRajya sabha
Advertisement
Next Article