Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விலைவாசி உயர்வை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம்!

01:01 PM Aug 08, 2024 IST | Web Editor
Advertisement

விலைவாசி உயர்வைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 22ஆம் தேதி முதல் இரு அவைகளிலும் நடைபெற்று வருகிறது. மத்திய நிதியமைச்சர் மக்களவையில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. வக்ஃப் சட்டத்தில் திருத்தம் செய்யும் முக்கிய மசோதா இன்று தாக்கல் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் விலைவாசி உயர்வைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வெங்காயம் மற்றும் இதர காய்கறிகளின் விலை உயர்வுக்கு எதிராக பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் வெங்காய மாலை அணிந்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை பாஜக உறுதி செய்ய வேண்டும். மகாராஷ்டிரா விவசாயிகள் மீதான ஏற்றுமதி தடையை நீக்க வேண்டும், போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகளுக்கு நீதி வழங்குவதே எங்களது நோக்கம் என கோஷமிட்டனர்.

Tags :
farmersMSPopposition MPsparliamentprice hike
Advertisement
Next Article