Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க அரிய வாய்ப்பு...தவற விடாதீங்க...!

03:22 PM Aug 05, 2024 IST | Web Editor
Advertisement

பிறப்புச் சான்றிதழில் 15 ஆண்டுகளாக பெயர் சேர்க்காதவர்கள் வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் சேர்த்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்தியாவின் முக்கிய சேவைகள் அனைத்திற்குமே பிறப்பு சான்றிதழ் கட்டாயம் என்ற நிலை உள்ளது. இதை வைத்தே கல்வி நிறுவனங்களில் சேருவது மற்றும்,  ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் பெறுவது என அனைத்து சேவைகளுக்கும் பிறப்பு சான்றிதழ் கட்டாயம் என்ற நிலை உள்ளது. இந்த நிலையில், பிறப்பு சான்றிதழில் 15 ஆண்டுகளாக பெயர் சேர்க்காதவர்கள் வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் பெயர் சேர்த்துக் கொள்ளலாம் என பொது சுகாதாரத்துறை இயக்குநரும் பிறப்பு, இறப்புச் சான்றிதழ் பதிவாளருமான செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் முறையிட்டு பிறப்புச் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என்றும், மாவட்ட சுகாதார இணை மற்றும் துணை இயக்குநர்கள் பள்ளி மாணவர்களின் பிறப்புச் சான்றிதழில் பெயர் இருப்பதை உறுதி செய்து, விடுபட்டிருந்தால் மாணவர்கள் வாயிலாக பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து தேவையான ஆவணங்களை கொண்டு பெயர் சேர்க்கும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிறப்புச் சான்றிதழ் குழந்தையின் சட்டப்பூா்வ சான்றிதழாகும். குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான பிறப்புச் சான்றிதழ் ஆகும்.  ஒரு குழந்தையின் பிறப்பு, பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின் அக்குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 21 நாள்களுக்குள் குழந்தையின் பெற்றோா் அல்லது காப்பாளா் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்பந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரிடம் அளித்து எவ்வித கட்டணமுமின்றி பெயா் பதிவு செய்யலாம். 12 மாதங்களுக்குப் பின் குழந்தையின் பெயரை 15 வருடங்களுக்குள் உரிய காலதாமதக் கட்டணம் ரூ.200 செலுத்தி பதிவு செய்வதற்கு பிறப்பு இறப்பு பதிவுச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Tags :
Birth Certificatenametamil nadu
Advertisement
Next Article