ஆஸ்கர் 2024-ல் ‘ஓப்பன்ஹெய்மர்’ ஆதிக்கம் | மீண்டும் சாதித்த கிறிஸ்டோபர் நோலன்!
2024ம் ஆண்டுக்கான 96வது (96th Oscars Award)ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் உள்ள பெவர்லி ஹில்டன் ஹோட்டலில் இன்று நடைபெற்றது.
மேஜிக்கை வைத்து மேஜிக் செய்து (The Prestige ), கனவுக்குள் கனவு என மாய வித்தை நிகழ்த்தியது (INCEPTION ) என திரையில் வித்தைகள் நிகழ்த்தியவர். தற்போது இரண்டாம் உலகப் போரின்போது அணுக்குண்டு தயாரிக்க உதவிய அமெரிக்க இயற்பியலாளர் ஜே.ராபர்ட் ஓப்பன்ஹெய்மரைப் பற்றி படமெடுத்து வருகிறார். இதற்கு முன்பாக வெளியான இவரது படமான டெனெட் படத்தில், காட்சிகளைத் தத்ரூபமாகக் கொண்டுவரும் நோக்கில் அசலான விமானத்தை வெடிக்கச் செய்து அதை காட்சிப்படுத்தி சினிமா உலகையே ஆச்சரியப்படுத்தினார்.
இந்நிலையில், நோலன் அமெரிக்காவின் முதல் அணுசக்தி ஆயுதத்தை உருவாக்கிய அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானி ஜே. ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் என்பவரின் வாழ்க்கையை மையமாக வைத்து படத்தை எடுத்திருந்தார். இந்த படம், கடந்த ஆண்டு ஜூலை 21-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
படம் குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தது. அத்துடன் திரையரங்குகளில் வெளியான இப்படம் உலகம் முழுவது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
கொரோனா நோய் தொற்று காலத்திற்கு பின் உலகின் அனைத்து திரைத்துறைகளும் பெரும் பாக்ஸ் ஆஃபிஸில் பெரும் சரிவை எதிர்கொண்டு வந்தன. திரையரங்கத்தை நோக்கி மக்களை ஈக்க நல்ல படங்களின் வருகையும் குறைவாகவே இருந்தது. அதிகம் எதிர்பார்க்கப் பட்ட பல படங்களும் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இப்படியான நிலையில் வெளியான ஓப்பன்ஹெய்மர் மக்களை கூட்டம் கூட்டமாக திரையரங்குகளை நோக்கி படை எடுக்க வைத்தது . இந்தியாவில் மட்டும் 150 கோடிகளுக்கும் மேலாக வசூல் செய்த இந்தப் படம் உலகளவில் 8 ஆயிரம் கோடி வசூல் ஈட்டியதாக கூறப்படுகிறது.
இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி , அமேரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் அனு ஆயுதத்தை உருவாக்கும் முயற்சிகளில் கடுமையாக ஈடுபட்டிருந்தன. குறிப்பாக ஹிட்லர் இந்த முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார் என்று தெரிந்துகொண்ட அமெரிக்கா இயற்பியலாளரன ஓப்பன்ஹெய்மரிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்தன.
இயற்பிய மீது அதீத காதல் கொண்ட ஓப்பன்ஹெய்மர் மற்றும் அவரது ஆராய்ச்சியாளர் குழு இணைந்து முதல் அனு ஆயுத சோதனையை 1945 ஆம் ஆண்டு வெற்றிகரமாக நடத்தி முடித்தார்கள். தனக்கு இயற்பியல் மீது இருந்த ஆர்வத்தின் உந்துலால் மனித சமூதாயத்திற்கே அழிவை ஏற்படுத்தக் கூடிய ஒரு ஆயுதத்தை ஓப்பன்ஹெய்மர் உருவாக்கியிருந்தார். விளைவாக ஹிரோஷிமா மற்றும் நாகசாகியின் அழிவை அவர் தன் கண் முன்னால் பார்த்தார்.
ஓப்பன்ஹெய்மர் படத்தை முழுமுழுக்க ஐமேக்ஸ் கேமராவில் படம் பிடித்ததோடு படத்தில் அணுகுண்டு வெடிப்பு பற்றிய காட்சிகளெல்லாம் உண்மையாகவே அணுகுண்டை வெடிக்கச்செய்து படமாக்கியுள்ளார் நோலன். இதை உறுதிப்படுத்தும் விதமாக “இந்த ஓப்பன்ஹெய்மர் படத்தில் ஒரே ஒரு CG காட்சி கூட இல்லை” என நோலனே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணம், டால்பி திரையரங்கில் 2024ம் ஆண்டுக்கான 96வது (96th Oscars Award)ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஓபன் ஹெய்மர், பார்பி, புவர் திங்ஸ், காட்ஸில்லா மைனஸ் ஒன் உட்பட பல படங்கள் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை பெற்றன.
இந்த ஆண்டு ஆஸ்கர் விழாவில் மொத்தம் 13 பிரிவுகளின் கீழ் இப்படம் விருதுக்கு பரிந்துரைக்கப் பட்டது. இந்நிலையில், சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருது ‘ஓப்பன்ஹெய்மர்’ படத்திற்காக கிறிஸ்டோஃபர் நோலனுக்கு வழங்கப்பட்டது. இதுவரை 8 முறை ஆஸ்கர் இறுதிப் பட்டியலில் பரிந்துரைக்கப்பட்ட நோலன், தனது முதல் ஆஸ்கர் விருதை வென்றுள்ளார்.
மேலும், சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது ‘ஓப்பன்ஹெய்மர்’ திரைப்படத்திற்காக கிளியன் மர்ஃபிக்கும், சிறந்த இசைக்கான ஆஸ்கர் விருதை லுட்விக் கொரான்சனுக்கும், சிறந்த ஒளிப்பதிவுக்கான ஆஸ்கர் விருதை ஹொய்டே வான் ஹொய்டேமாவுக்கும், சிறந்த படத்தொகுப்புக்கான ஆஸ்கர் விருதை ஜெனிஃபர் லேமுக்கும், சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை ‘ஓப்பன்ஹெய்மர்’ படத்திற்காக ராபர்ட் டெளனி ஜூனியருக்கு வழங்கப்பட்டது.
இதற்கெல்லாம் மேலாக, ‘ஓப்பன் ஹெய்மர்’ சிறந்த திரைப்படத்திற்காக ஆஸ்கர் விருதை எம்மா தாமஸ் சார்லஸ் ரோவன், கிறிஸ்டோபர் நோலன் பெற்றனர். அதன் படி 13 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப் பட்ட இப்படம் 7 விருதுளை வென்றது.