‘ஆபரேஷன் சிந்தூர்’ - தாக்குதல் வீடியோக்களை பகிர்ந்த இந்திய ராணுவம்!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிர்வினையாற்றும் வகையில் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத அமைப்புகளின் முகாம்கள் மீது இந்தியா நேற்று நள்ளிரவு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு பாகிஸ்தான் ராணுவம் எல்லை பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இதில் பொதுமக்கள் 10 பேர் உயிரிழந்துள்ளனர், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்திய நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் பாதிக்கப்படவில்லை என்று கூறி இந்திய அரசு கூறி வருகிறது. இருப்பினும் பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் க்வாஜா ஆசிஃப் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பொதுமக்கள் உட்பட இரண்டு மசூதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தார். மேலும் சில ஆங்கில ஊடகங்கள் பாகிஸ்தானில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக செய்திகள் வெளியிட்டுள்ளது.
இதுவரை ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் குடும்பத்தின் 10 பேருடன் அவருக்கு நெருக்கமான சிலர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பான வீடியோக்களை இந்திய ராணும் பகிர்ந்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:
1. முசாஃபர்பாத்தில் உள்ள சாவய் நாலா முகாம்:
2. கோட்லியில் உள்ள குல்பூர் முகாம்:
3. பிம்பாரில் உள்ள பா்னாலா முகாம்:
4. கோட்லியில் உள்ள அப்பாஸ் முகாம்:
5. மெஹ்மூனா ஜோயா முகாம்:
6. பஹவல்புரில் உள்ள மார்கஸ் சுபனல்லா:
7. சியால்கோட்டில் உள்ள சர்சால் முகாம்:
8. முரித்கேயில் உள்ள மார்காஸ் தைபா முகாம்:
9. முசாஃபர்பாத்தில் உள்ள சைத்னா பிலால் முகாம்: